சல்லடையிலும் தண்ணீர் நிரப்பலாம்!
ADDED :4355 days ago
சல்லடையில் தண்ணீர் நிரப்ப முடியுமா என்றால்...அதெப்படி! சல்லடை ஓட்டையாக இருக்கும். அதில் தண்ணீர் ஊற்ற ஊற்ற , ஓட்டை வழியாக வழிந்து விடுமே, என்று தான் சொல்வோம். ஆனால், மகான்களிடம் கேட்டால் சல்லடையில் தண்ணீர் நிரப்ப முடியும் என்பார்கள். எப்படி தெரியுமா? தண்ணீர் உள்ள பெரிய பாத்திரத்தில் சல்லடையை மூழ்க வைத்து பாருங்கள். சல்லடையில் தண்ணீர் நிரம்பி இருக்கும். அது போலத்தான் இறைபக்தியும். நமது மனம் சல்லடை மாதிரி. அதில், இறை பக்தியை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மனதிலுள்ள ஆசைகள், எண்ணச்சிதறல்கள் போன்ற துவாரங்களின் வழியே அது வழிந்து விடும். இறைவன் என்கிற பெரிய தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மனம் என்கிற சல்லடையை மூழ்க வைத்து விட்டால் மனதில் இறை பக்தி தானாக நிரம்பி விடும்.