தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்!
ADDED :4288 days ago
திருநெல்வேலி: தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. தென்காசி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 6ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்க தீபாராதனைகள், மாலையில் ஆன்மீக சொற்பொழிவு, இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. 9ம்நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. முதலில் சுவாமிதேரும், பின்னர் அம்பாள் தேரோட்டமும் நடந்தது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து நிலையம் சேர்த்தனர்.