உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஆர்.சி., பள்ளி மாணவ மாணவிகள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலை ஆர்.சி., பள்ளியின் ஜே.ஆர்.சி., மாணவ, மாண விகள் 84 பேர் பங்கேற்று நேற்று கோவிலை தூய்மைப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளா ளர் ஜோசப்ராஜ், தலைமையாசிரியர் முருகன் தலைமை தாங்கினர். பள்ளியின் ஜே.ஆர்.சி., புரவலர் பெருமாள் மற்றும் கோவில் குருக்கள் முன்னிலையில் கோவில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. காலை 10 மணிக்கு துவங்கிய இப்பணிகள் மாலை 4 மணி வரை நடந்தது. ஆலோசகர் ஜெரோம் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !