உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் 27ம் தேதி நாட்டியாஞ்சலி துவக்கம்!

சிதம்பரத்தில் 27ம் தேதி நாட்டியாஞ்சலி துவக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி விழா, வரும், 27ம் தேதி துவங்குகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, 33ம் ஆண்டு, நாட்டியாஞ்சலி விழா, வரும், 27ம் தேதி துவங்கி, ஐந்து நாள் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, பிரபல நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர் மற்றும் மூத்த வழக்கறிஞர், சம்மந்தம், நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலில், வரும் 27ம் தேதி, நாட்டியாஞ்சலி விழா, சிவகுமார் தீட்சிதர் தலைமையில் துவங்குகிறது. முதல் முறையாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த, நாட்டியக் கலைஞர் மார்கி மது சாக்கியரின், கூடியாட்டம் என்ற புதிய நாட்டிய நிகழ்ச்சி நிறைவு நாளில் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !