உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாணி கணபதி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி

வாணி கணபதி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி

விழுப்புரம்: அய்யூர் அகரம் வாணி கணபதி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விழுப்புரம் அடுத்து அய்யூர் அகரம் நாகர் பள்ளி வளாகத்திலுள்ள, வாணி கணபதி கோவிலில் விநாயகருக்கு மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. வாணி கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தேங்காய் மாலை, வாழைப்பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகருக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை நடந்தது. கோவில் அர்ச்சகர் நடராஜ குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார். பள்ளியின் சேர்மன் ராஜசேகரன், தாளாளர் உமா மகேஸ்வரி, பி.ஆர்.ஓ., ராமானுஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !