காய்கனி அலங்கார உற்சவ விழா
ADDED :4288 days ago
ராசிபுரம்: ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், ஆறாம் ஆண்டாக காய்கறி அலங்கார உற்சவ விழா நடக்கிறது. ராசிபுரம் நகர மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் காய்கறி அலங்கார உற்சவ விழா நடக்கும். அதன்படி, ஆறாம் ஆண்டு விழாவாக, வரும், 28ம் தேதி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, 108 வகை காய்கனி அலங்காரத்தில், அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காய்கனி அலங்காரத்தில், சகல தோஷம், திருமண தோஷம், புத்திர பாக்கியம், நாகதோஷம், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் உள்ளவர்கள் பங்கேற்று, அம்மன் அருள் பெறலாம் என, நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.