செல்லியாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா பூச்சாட்டுதல்
பவானி: பவானி பகுதி மக்களின் காவல் தெய்வமான, ஸ்ரீசெல்லியாண்டியம்மனுக்கு, மாசி மாத திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான மாசி திருவிழா, 18ம் தேதி இரவு, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 25ம் தேதி கம்பம் நடுதல், 26ம் தேதி கொடி ஏற்றுதல், 4ம் தேதி பெண்கள் அம்மன் கருவறைக்கு சென்று பால், மஞ்சள் நீர் ஊற்றுதல், 5ம் தேதி மாசி திருவிழாவான சக்தி அழைத்தல் மற்றும் பொங்கல் விழா நடக்கிறது. பூச்சாட்டுதலை தொடர்ந்து செல்லியாண்டியம்மன் கோவில் முன், அறங்காவலர் சரவணன் மற்றும் குழுவினர் மூலம், மதியம் அன்னதானமும், அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. பவானி நகர அ.தி.மு.க., செயலாளர் கிருஷ்ணராஜ், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், கவுன்சிலர்கள் மோகன், ஆண்டியப்பன் மற்றும் செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் கனகராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.