உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தகிரீஸ்வரர் திருவிழா நாளை உள்ளூர் விடுமுறை

தீர்த்தகிரீஸ்வரர் திருவிழா நாளை உள்ளூர் விடுமுறை

தர்மபுரி: அரூரை அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, நாளை, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் மார்ச், 1ம் தேதி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களுக்கு மட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளன்று, சார்நிலைக் கருவூலங்களில் அரசு பாதுகாப்புக்கான, அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !