உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் மார்ச் 5ல் குண்டம் விழா

காளியம்மன் கோவிலில் மார்ச் 5ல் குண்டம் விழா

குமாரபாளையம்: காளியம்மன் கோவிலில், மார்ச், 5ம் தேதி குண்டம் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. குமாரபாளையம், ராஜவீதியில் உள்ள காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தினமும் மாலை, 6 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. ஃபிப்ரவரி, 25ம்தேதி, மறு பூச்சாட்டு விழா நடக்கிறது. 26ம் தேதி கொடியேற்று விழா, மார்ச், 4ம் தேதி, தேர்க்கலசம் வைத்தல், 5ம் தேதி, குண்டம் திருவிழா நடக்கிறது. காவிரி ஆற்றுக்குச் செல்லும் பக்தர்கள், புனித நீராடி, ஊர்வலமாக வந்த கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று பொங்கல் வைத்தல், சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மார்ச், 6ம் தேதி திருக்கல்யாணம், தேர்த்திருவிழா நடக்கிறது. 7ம் தேதி தேர் நிலை சேர்தல், வாணவேடிக்கை நடக்கிறது. 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 9ம் தேதி ஊஞ்சல் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !