மார்ச் 3ல் நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்!
ADDED :4289 days ago
நத்தம்: பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா, மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ம் தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், 19ம் தேதி இரவு பூப்பல்லக்கு திருவிழாவும் நடைபெறும்.