காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா தொடக்கம்!
ADDED :4289 days ago
குமாரபாளையம்: காளியம்மன் கோயிலில் மகா குண்டம் மற்றும் தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பூச்சாட்டுதலை முன்னிட்டு, காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.