உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

ஊட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

ஊட்டி : ஊட்டி காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 27ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவில் ஊட்டி காந்தலில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் சிவராத்திரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு சிவராத்திரி பெருவிழா வரும் 26ம் தேதி துவங்கி 1ம் தேதி வரை நடக்கிறது. 26ம் தேதி மாலை 3:00 மணிக்கு காந்தல் ஆதிபராசக்தி மகளிர் குழு, ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம் காசி விசாலாட்சியம்பாள் மகளிர் குழு சார்பில், திருவிளக்கு பூஜை நடக்கிறது. 27ம் தேதி காலை 7:00 மணிக்கு காலசாந்தி பூஜை, காலை 11:00 மணிக்கு உச்சிகால பூஜை, காலை 11:30 மணிக்கு அன்னதானம், மதியம் 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை 3:30 மணிக்கு மகா பிரதோஷம், மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு சுவாமி ஆலயம் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7:30 மணிக்கு பக்தி இசை, 8:30 மணிக்கு "அள்ளி கொடுப்பதெல்லாம் சிவ குடும்பமே என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நள்ளிரவு பக்தி திரைப்படம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து 28ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 1ம் தேதி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்னேற்ற சங்கம், கோவில் சேவா சங்கம், ஸ்ரீமான் ராயபோயர் குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !