உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்சிஸ்வரர் கோவில் புதிய தேர் 19ம் தேதி வெள்ளோட்டம்

ஆட்சிஸ்வரர் கோவில் புதிய தேர் 19ம் தேதி வெள்ளோட்டம்

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரர் கோவிலில், புதிய தேர், வருகிற மார்ச் 19ம் தேதி வெள்ளோட்டம் விட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அச்சிறுபாக்கம் பகுதியில், புகழ்பெற்ற ஆட்சிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்த் திருவிழாவின்போது ஆட்சிஸ்வரரும், இளங்கிளி அம்பாளும், தனித்தனி தேர்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளடைவில், அம்பாளுடைய தேர் ஒரு தேர் முற்றிலும் பழுதானதால், கடந்த சில ஆண்டுகளாக தேர்த் திருவிழாவின்போது அம்பாள், உலா டிராக்டரில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், புதிய தேர் அமைக்க கோவில் திருப்பணிக் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி அச்சிறுபாக்கம் குடியிருப்பு வாசிகளிடமிருந்து, 70 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய தேர் அமைக்கும் பணி துவங்கியது. 36 அடியில் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த புதிய தேர் அமைக்கும் பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. அற நிலையத் துறையினர் அனுமதியுடன், இந்த புதிய தேரை மார்ச் 19ம் தேதி வெள்ளோட்டம் விட கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !