வடுவகுப்பம் கோவிலில் நாம சங்கீர்த்தன விழா
ADDED :4285 days ago
நெட்டப்பாக்கம்: வடுவகுப்பம் பெருமாள் கோவிலில் நாம சங்கீர்த்தன பெருவிழா, வரும் 2ம் தேதி நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த வடுவகுப்பம் கிராமத்தில் உள்ள பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவிலில் வேங்கடாசலபதி பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தன மகோற்சவப் பெருவிழா, வரும் 2ம் தேதி மாலை 5.?? மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பாண்டுரங்கன் திருக்கோல சேவை நிகழ்ச்சி நடக்கிறது.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஸ்ரீ ஹரிநாமத்தை உச்சரித்து நாராயணனின் திருவருள் பெறுமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.