உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா!

விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா!

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நேற்று  அதிகாலை வரை நான்குகால பூஜைகள் வெகு விமர்சியாக நடந்தது. அதன்   பின் பக்தர்கள் சிவபாத தரிசனத்தை கண்டு வணங்கினர். தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வி யாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித் திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ் சலி-வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு ருத்ரபாதம் காட்டி விளமலில் அருளி யதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனி வர் களுக் கு திருவடிக்காட்டி அருளியதை ஆருத்ரா  தரிசனமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ, விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். யுகம் படைக்க, சிவன் அக்னி பிழம்பாக விஸ்வரூம் எடுத்து, மகாவிஷ்ணு திருவடியை பார்த்த இடம் திருவாரூர்-திருவிளமல், இந்த கோவிலில் ஆண் டு தோறும் சிவன் ராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தற்போது 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம்  27ம் தேதி இரவு  7.30 மணிக்கு முதல் காலம், இரவு 10.30 மணிக்கு இரண்டாம் காலம், நடுநிசி 12.30 மணிக்கு மூன்றாம் காலம், அதிகாலை 2.30 மணிக்கு நான்காம் கால பூஜைகள் வெகு விமர்சியாக  நடந்தது. அதன் பின் 3 மணிக்கு சிவபெருமான் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடந் தது. ஈசனின் முகமான தியாகேசனின் முகம் பார்த்து, ஈசன் திருவடியான திரு விளமலில் பாத தரிசனம்பார்த்தால் சாவ,பாவ விமோசன ம் பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். இதனால் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற் றிருந்தனர். இதேபோன்று மணக்கால் ஐயம்பேட்டை சவுந்ரநாயகி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பெண் சிவ பக்தர் தங்கேஸ்வரி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சிறப்புவழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டத்தில் <உ<ள்ள சிவன்கோவில்கள் மற்றும் அங்காளம்மன் கோவில்களில் மகா சிவா ராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !