தர்மபுரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் பால்குட ஊர்வலம்
தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் அங்காளபரமேஸ்வரி கோவிலில், மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. தர்மபுரி அன்னசாகரம் அங்காளபரமேஸ்வரி கோவிலில், மாசி மாத மயான கொள்ளை திருவிழா கடந்த, 25ம் தேதி துவங்கியது. நேற்று காலை, பால்குடம் ஊர்வலமும், அதனை தொடர்ந்து, மதியம் அன்னதானமும் நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் தாண்டேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது. நாளை அதிகாலை, 5 மணிக்கு மொகுட்டி அடித்தலும், காலை, 10.30 மணிக்கு மேல் அம்மன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6 மணிக்கு மேல் மின்விளக்கு அலங்காரத்தில், அங்காளபரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா மற்றும் வானவேடிக்கை நடக்கிறது. வரும், மார்ச், 2ம் தேதி, காலை, 9 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை, 6 மணிக்கு பிள்ளை பாவு நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 3ம் தேதி காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு, 7 மணிக்கு கும்ப பூஜையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பூக்கடை ரவி, மாரிமுத்து, ரத்தினம், பாண்டியன், முருகன், சேட்டு, சீனிவாசன், ராஜா உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.