கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ரூ.1.85 லட்சத்தில் அன்னதான மண்டபம்
ADDED :4281 days ago
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில், பக்தர்கள் அன்னதானம் உண்ண ஏதுவாக, 1.85 லட்சம் ரூபாயில் தனியாக அன்னதான மண்டபம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு நகரில் பிரசித்த பெற்ற கோவில்களில், கோட்டை ஆரூத்ரா கபாலீஸ்வர் கோவிலும் ஒன்று. அறநிலையத்துறையின் கீழுள்ள கோவிலில், தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், தரிசனத்துக்கு வரும், 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் பிரகாரத்தில், கோ சா லை அருகில் தற்போது பக்தர்களுக்கு டேபிள், சேர் போட்டு, அமர்த்தி அன்னதானம் வழங்குகின்றனர். பக்தர்கள் வசதிக்காக, தனியார் நன்கொடை, 1.85 லட்சம் ரூபாயில், கோ சாலைக்கு அடுத்து, தனியாக அன்னதான மண்டபம் அமைக்கும் பணி துவங்கியுள்ளதாக, கோவிலின் செயல் அலுவலர் விமலா தெரிவித்தார்.