உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி விழா!

ஈரோடு சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி விழா!

ஈரோடு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் உட்பட சிவ தலங்கள், அங்காளம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. ஈரோடு கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, 108 தீர்த்த கும்பங்கள் வைத்து, நான்கு கால பூஜையும், சிறப்பு யாகமும் நடந்தது. நான்கு கால சிறப்பு பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோல, கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோ வில், மகிமலீஸ்வரர் கோ வில், காங்கேயம்பாளைய ம் நட்டாற்றீஸ்வரர் கோவிலிலும், நகரிலுள்ள அங்காளம்மன் கோவில், அக்ரஹாரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 10,008 சிவலிங்கம் வை த்து, மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !