கிணத்துக்கடவு குண்டத்து காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :1 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மாளேகவுண்டன்பாளையத்தில் உள்ள குண்டத்து காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. கிணத்துக்கடவு, மாளேகவுண்டன்பாளையம் குண்டத்து காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி, சுவாமி பூ கேட்கும் நிகழ்வுடன் துவங்கியது. 24ம் தேதி, சக்தி அழைப்பு மற்றும் சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்டவைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டார்கள். மார்ச் 3ம் தேதி, சுவாமிக்கு மாவிளக்கு எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து குண்டம் திறப்பு நடந்தது. 4ம் தேதி, குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. இதில், பக்தர்கள் பலர் குண்டம் இறங்கி சுவாமியை வழிபட்டார்கள். இன்று, 6ம் தேதி, மஞ்சள் நீர் உற்சவம், சுவாமிக்கு மகா அபிஷேகம் தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் போன்ற பூஜைகள் நடக்கிறது.