குப்பாண்டம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ADDED :1 days ago
அவிநாசி; குப்பாண்டம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
அவிநாசி வட்டம், குப்பாண்டம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது. முன்னதாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் சென்றாய பெருமாள் கோவிலில் இருந்து பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து,கிடா வெட்டு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. குப்பண்டம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழசண்முகம், சென்றாய பெருமாள் திருக்கோவில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் நாட்டாமை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.