உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா; எல்லை கட்டுதல் உற்சவம்

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா; எல்லை கட்டுதல் உற்சவம்

கடலுார்: பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது. 

கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரடியில் உள்ள வண்ணார மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சோலை வாழியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் மார்க்கெட் பகுதி மக்கள் சார்பில் எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் தீப்பந்தங்கள், ஆயுதங்கள் ஏந்திச் சென்றனர். நேற்றிரவு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடந்தது. வரும் 22ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.  தினமும் வீதியுலா நடக்கிறது. வரும், 26ம் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம், 30ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !