மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா: தஞ்சாவூரில் கோலாகலம்!
ADDED :4280 days ago
திருவையாறு: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவையாறு ஐயாறபர் கோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் தகதிமிதா நாட்டிய பள்ளி தில்லை அகிலன் குழுவினரின் பரதநாட்டியம், இலங்கை அபிநயாசேத்ரா நாட்டிய பள்ளி குரு திவ்யா சுஜன் குழுவினரின் பரத நாட்டியம், சென்னை வாமதேவ கலைக்கூடம் குரு வானமல தேசிகன் குழுவினரின் பரத நாட்டியம் நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடந்த பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா தில்லை நடனாலயா குரு தயமயந்தி பால்ராஜு குழுவினரின் பரத நாட்டிய நடந்தது.