அகஸ்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா!
ADDED :4280 days ago
சிவகங்கை: புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் மாசி 14ம் நாள் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.நேற்று காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. 10.05 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.