பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்!
ADDED :4289 days ago
பழநி: பழநிமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா பிப்., 21ல் துவங்கியது. கோயில் முன் திருக்கம்பம் நடப்பட்டு, கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்றிரவு 7.35 மணிக்கு மேல் மாரியம்மன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது. கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. இரவு 8மணிக்கு மேல் தங்கமயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 11, தேரோட்டம் மார்ச் 12 ல் நடக்கிறது.