உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குடம்!

நத்தம் மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குடம்!

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெரு விழா, மார்ச் 3 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் உலுப்பக்குடி கரந்தன் மலை கன்னிமார்கோயில் அருவியிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சந்தனக் கருப்புக்கோயிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலம், மாரியம்மன் கோயில் வந்தடைந்தது. கம்பத்திற்கும் தீர்த்ததால் அபிஷேகம் செய்து, வழிப்பட்டனர். விழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அம்மன் நகர்வலம் நடைபெறும். நேர்த்திக்கடனாக கரும்புத்தொட்டில் குழந்தைகள், பால்குடம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபடுவர். காப்புக்கட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் செல்வி, பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சுப்புராசு, சின்னராசு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !