புளியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் 18ஆம் தேதி சாட்டப்பட்டு, கணபதி பூஜையுடன் இக்கோவில் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி, கம்பம் போடுவது, பொன்னேர் கட்டி கம்பு விதைப்பது, சக்தி கும்பம் ஸ்தாபனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் இருந்து சீர்கொண்டு வந்து, அம்மன் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. பின், ஊர் பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் கொண்டு வந்து அம்மனை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு மேல், வேண்டுதல் வைத்தவர்கள் ஊர்வலமாக பூவோடு எடுத்து நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். இரவு 9:00 மணிக்கு மேல், கம்பம், சக்கதி கும்பம் ஆகியவை கங்கையில் விடப்பட்டன. திருவிழாவின் தொடர்ச்சியாக, இன்று முழுவதும் மஞ்சள் நீராட்டம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்க இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.