உத்திராதி மட பீடாதிபதி அருளாசி!
ADDED :4267 days ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உத்திராதி மட பீடாதிபதி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உத்திராதி மட பீடாதிபதி சத்யாத்ம தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வருகை தந்தார். திருக்குளம் அருகில் உள்ள உத்திராதி மடத்தில் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார். பின்னர் பூவராகசுவாமி கோவிலுக்கு வருகை தந்து வேதபாராயணம் வாசித்தார். அதையடுத்து, விருத்தாசலம் சாலையில் உள்ள தண்டதீர்த்தம் திருக்குளத்தில் மகா பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு தண்டதீர்த்த தண்ணீரை தெளித்து ஆசி வழங்கினார். ஏற்பாடுகளை ஸ்ரீமுஷ்ணம் உத்திராதி மட மேலாளர் பூவராகமூர்த்திராவ் மற்றும் பலர் செய்திருந்தனர்.