உருவாட்டி கோயிலில் நாளை பங்குனி விழா!
ADDED :4266 days ago
காளையார்கோவில் : உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 8ம் தேதி அம்மனுக்கு கொடியேற்றமும், காப்பு கட்டுதலுடன் விழா துவங்க உள்ளது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 15ம் தேதி திருவிழா நிகழ்ச்சி, 16ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம், 17ம் தேதி பூப்பல்லக்கு, தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் உருவாட்டி கிராமத்தினர் செய்து வருகின்றனர்.