உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_28611_162716206.jpgபேரூர் பட்டீஸ்வரர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குன உத்திர தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பட்டீஸ்வரர் மற்றும் பச்சை நாயகியம்மன் அருள்பாலித்தனர். இரவு 8.00 மணிக்கு மலர் பல்லக்கு திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி வரை, காலை 9.00 மணிக்கு வேள்வி பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. 8ம் தேதி இரவு சூர்யபிரபை, சந்திரபிரபை திருவீதி உலா, 9ம் தேதி இரவு, பூதவாகனம், சிம்மவாகனம் திருவீதியுலா, 10ம் தேதி இரவு, மலர்ரதம், காமதேனு வாகனம் திருவீதியுலா, 11ம் தேதி இரவு 9.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகன காட்சி, 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி இரவு 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடக்கிறது. 13ம் தேதி மாலை 3.15 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி இரவு 8.00 மணிக்கு வேடுபரி உற்வசம், குதிரைவாகனம், கிளிவாகனம் திருவீதி உலா, 15ம் தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத் திருவிழா நடக்கிறது. இறுதியாக, வரும் 16ம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள், ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சனம், தரிசனக்காட்சி, திருவீதி உலாவுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !