வலம்புரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :4202 days ago
மேலப்பெரும்பள்ளம்: வலம்புரநாதர் கோவிலில் பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிச்சாண்டனார் சாமிக்கு பக்தர் கொண்டு வந்த பால், தேன், இளநீர், பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து நட்சத்திர தீபம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் தீபம், மா விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.