கோத்தகிரி பேட்லாடா மாரியம்மன் திருவிழா
ADDED :4266 days ago
கோத்தகிரி:கோத்தகிரி பேட்லாடா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிமுதல் 2:00 மணிவரை, தண்டுமாரியம்மன் வெள்ளித்தேரில் திருவீதி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 6:00 மணிவரை அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆடல்பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது. விழாவில், பேட்லாடா சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்தி, அம்மனை வழிப்பட்டனர். விழா, ஏற்பாடுகளை காரியதரசி வக்கீல் சந்தானகோபால், திருப்பணிக்குழுவினர் உட்பட ஊர் மக்கள் செய்திருந்தனர்.