உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவிலில் : கிருத்திகை விழா

மயிலம் கோவிலில் : கிருத்திகை விழா

மயிலம்: மயிலம் சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை சிறப்பாக நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.காலை 11 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை, வழிபாடுகள் நடந்தது.பிற்பகல் 1 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !