அலிவலம் அருட்பெருஞ்ஜோதி மன்றம் சார்பில் மாசி பூசப்பெருவிழா!
திருவாரூர்: திருவாரூர் அலிவலம் அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்றம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் 94 ஆண்டு மாசி பூசப்பெருவிழா நேற்று நடந்தது. இதில் ஆயிரகணக்கானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். வேத ஆகமங்களின் விளைவுகளுக்கெல்லாம் ஆதாரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி என்ற திருவருட்பாவின் அகற்பாவிற்கிணங்க சுமார் 93 ஆண்டுகளாக திருவாரூர் அருகே திருவருட்பிரகாசர் திருவடியைப் போற்றக்கூடிய இடமாக அலிவலம் அமைந்துள்ளது. இங்குள்ள அருட்ஜோதி இராமலிங்க சுவாமிகள் நிலையத்தில் மாசிப்பூச ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தற் போது 94 வது மாசிப்பூச விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் 8ம்தேதி இரவு ஏழு மணிக்கு, 2014ம் ஆண்டு வடலூர் தை பூசத்தில் அருட் பெருஞ் ஜோதி அகல் விளக்கு மன்றம் வெளியிட்ட ஆண்டு அறிவிக்கை குறி த்த சத்விசாரம், கருத்துப் பரிமா ற்றம் கீச்சாங்குப்பம் அருட்பெருஞ்ஜோதி அகல்விளக்கு மன்றத் தலைவர் கலைவாணன் தலைமையில் நடந்தது.
9ம்தேதி அதிகாலை 4,30 மணிக்கு திருஅருட்பா அகவல் பாராயணம் புதுச்சேரி சுகுமார் தலைமையில் நடந்தது.இதில் அலிவலம், நாகை, ஓடாச் சேரி, அரசவணங்காடு, ஆண்டிப்பாளையம், அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், அந்தணப்பேட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பா டுகளை நாகை அருட்பெஞ்ஜோதி அகல் விளக்கு மன்றம் மற்றும் கிளை மன்றங்கள் சன்மார்க்க சாதுக்கள் செய்திருந்தனர். காலை 8 மணிக்கு சன்மார்க்க கொடியை மனோகர் தலைமையில், நாகை சமரச சன்மார்க்க சங்க பொது செயலர் ராமமூர்த்தி ஏற்றி வைத்தார். அதன் பின் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு ரவி தலைமையில் சன்மார்க் சொற்பொழிவும், அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விழுப் புரம் இளங்கோவன் குழுவினர்களின் அருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.