உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் திருவிழா: பாதுகாப்புக்கு போலீசார் இன்றி பக்தர்கள் அவதி!

சித்தலூர் திருவிழா: பாதுகாப்புக்கு போலீசார் இன்றி பக்தர்கள் அவதி!

தியாகதுருகம்: சித்தலூர் திருவிழாவில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் தேர் வடம் பிடிக்கும் இடத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறைந்த போலீசார் நிறுத்தப்பட்டதால் @பாக் குவரத்து சிக்கல் ஏற்பட்டு 2 கி.மீ., தூரத்திற்கு பக்தர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் உள்ள பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம்(8ம்தேதி) நடந்தது. தமிழகம் முழுவதில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். பக்தர்கள் அதிகம் கூடும் இத்திருவிழாவில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் 50 க்கும் குறைவான போலீசாரே பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிக மக்கள் கூடும் இதுபோன்ற திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தி இருந்தால் பக்தர்கள் சிரமம் இன்றி திருவிழாவிற்கு வந்து சென்றிருக்க முடியும்.  இதில் கோட்டை விட்டதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தேரடியை ஒட்டி கடைகள் அமைக்க அனுமதி அளித்ததால் இப்பகுதியில் இடமின்றி பக்தர்கள் கூட்டம் நிற்பதற்கு கூட முடியாமல் அவதிப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அமைச்சர் மோகன் வடம் பிடிக்க வரும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேரை சுற்றி 5 போலீசார் மட்டுமே பக்தர்களை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தனர். வடம் பிடித்ததும் அமைச்சர் மோக னையும், அழகுவேலுபாபு எம்.எல்.ஏ.,வையும் பக்தர்கள் கூட்டத்தில் இருந்து கடும் போராட்டத்திற்கு இடையே வெளியே கொண்டு வந்தனர். கோவிலை சுற்றி தேர் வலம் வரும் பகுதி முழுவதும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்ததால் குறுகலான பாதையில் மிகவும் சிரமப்பட்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20க்கும் மேற்பட்ட இலவச பஸ்கள் இயக்கப்பட்டபோதிலும், அவைகள் சென்று வரும் வகையில் போக்குவரத்தை சரிசெய்ய போதிய போலீசார் நிறுத்தப்படவில்லை.இதனால் மதியம் 2 மணியில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையில் நடந்து செல்வதற்கு கூட வழியின்றி போனதால் முட்புதர்களை தாண்டிகுதித்து வயல்வெளிவழியே பக்தர்கள் கோவிலுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.தேர் சுற்றிவந்து நிலையில் நின்றதும் நெரிசலை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் ஒதுங்கிக் கொண்டனர். இதனால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரில் ஏறி அம்மன் சிலைகளில் இருந்த மாலை களையும், பழம் போன்றவற்றை அள்ளிச்செல்வதற்கு முண்டியடித்தனர்.இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு, சுற்றியிருந்த பலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. தேரில் இருந்த சுவாமி சிலைகளை பாதுகாக்க பூசாரிகள் கடுமையாக போராடவேண்டியிருந்தது. இதைபார்த்த பலரும் மன வேதனையடைந்தனர்.போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சித்தலூர் திருவிழாவிற்கு சென்ற பக்தர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட அதிகாரிகள் மீது பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !