உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூரில் முத்துபல்லக்கு விழா!

மேல்மலையனூரில் முத்துபல்லக்கு விழா!

செஞ்சி :மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற மாசி பெருவிழா கடந்த 27ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ம் தேதி  மயானகொள்ளையும், இம் மாதம் 3ம் தேதி தீமிதி விழாவும், 5ம் தேதி  திருத்தேர் வடம் பிடித்தலும் நடந்தது. தொடர்ந்து 10வது நாள் விழாவாக 8ம் தேதி இரவு முத்து பல்லக்கு ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை பல்லக்கில் ஏற்றி கிராம தெருக்களில் ஊர்வலமாக வந்தனர். சிலம்பாட்டம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.இதில் அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !