நாளை ஜலநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :4304 days ago
திருவள்ளூர் : ஏகாதசியை முன்னிட்டு, ஜலநாராயணருக்கு, சிறப்பு அபிஷேகம் நாளை நடைபெறுகிறது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர், பூங்கா நகரில் உள்ள, சிவா - விஷ்ணு கோவிலில் ஜலநாராயணர் சன்னதி அமைந்துள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டு வில் உள்ள ஜலநாராயணரை போல், 11 தலை ஆதிசேஷன் நாகத்தின் மேல் நர்த்தன ரூபத்தில், சங்கு, சக்கரம், கடாயுதம், அட்சய பாத்திரத்துடன் கூடிய நான்கு கரத்துடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அருள்கின்ற ஜலநாராயண பெருமாளை இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு மாதமும், ஏகாதசி தினத்தன்று, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு, ஜலநாராய ணருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஏகாதசியை முன்னிட்டு, நாளை 12ம் தேதி காலை 9:00 மணிக்கு ஜலநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.