உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிவிழா!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிவிழா!

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிபெருவிழா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்தி கடன், பாலாபிஷேகமும் செய்து வருகின்றனர். இன்று காலை திருமஞ்சன பாலாபிஷேகத்திற்கு பின், அம்மன் கரகத்துடன் எழுந்தருளுவார். இரவு, அலங்கார மின்னொளி ரதத்தில், மேற்கு ரத வீதி, கலைக்கோட்டு விநாயகர் கோயில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் தெரு மற்றும் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சந்நிதி வந்து சேருவார். பக்தர்களை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, விழாவை கொண்டாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !