உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசுவாமி கோவிலில் மூலஸ்தான பணி பாலாலயம்!

கந்தசுவாமி கோவிலில் மூலஸ்தான பணி பாலாலயம்!

திருப்போரூர் : கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக, திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், நேற்று பாலாலய பூஜை நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜகோபுரம் உள்ளிட்ட, துணை கோவில்கள் உட்பிரகார சன்னிதிகளில் திருப்பணி நடந்தது. பிரதான மூல ஸ்தானம், உள் சன்னிதி விமானம் திருப்பணி செய்ய பாலாலய பூஜை நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது. தியாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் மூலஸ்தான நடை, திருப்பணிக்காக அடைக்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் மோகனசுந்தரம் கூறுகையில், வரும் ஜூன் மாதத்திற்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !