உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு விழாவிற்கு 500 பேர் விண்ணப்பம்!

கச்சத்தீவு விழாவிற்கு 500 பேர் விண்ணப்பம்!

சிவகங்கை: இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில், கச்சத்தீவில் ஆண்டுதோறும் மாசியில் நடக்கும் புனித அந்தோணியார் சர்ச் திருவிழா, மார்ச் 15ல் நடக்கிறது. இவ்வாண்டு, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 250க்கும் மேற்பட்டோர், இத்திருவிழாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து, ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் அனுமதி . கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விவரம் சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 300க்கு மேற்பட்டோருக்கு, அனுமதி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !