குன்றக்குடி கோயிலில் மார்ச் 19ல் கும்பாபிஷேகம்!
ADDED :4225 days ago
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் திருக்கோயில், கும்பாபிஷேக விழா,வரும் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது. குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் ராஜகோபுரம், மண்டபங்கள் புதுப்பித்தல், புதிய மண்டபங்கள், வர்ணம் தீட்டுதல் உட்பட, பல்வேறு திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.இதன் கும்பாபிஷேகம் வரும் 19-ம் தேதி நடக்கிறது. முன்னதாக 16ம் தேதி,காலை 7 மணிக்கு கணபதி ஹோமம்,முதற்கால யாக பூஜைகளுடன் விழா ஆரம்பிக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பூசை அண்ணாமலை தம்பிரான், பிச்சை குருக்கள் செய்து வருகின்றனர்.