மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4226 days ago
வடமதுரை: தென்னம்பட்டியில் ஏர்ரம்மாள், நாகம்மாள், பொம்மி, வெள்ளையம்மாள், மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி இரண்டு நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாடாகி, கோபுர கலசங்களை புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
* எரியோடு அருகே நாகையகோட்டையில், ஆதிநாராயணப் பெருமாள், அமிர்தவள்ளி தாயார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.