திருப்பாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :4275 days ago
பொன்னேரி: திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருப்பாலைவனம் கிராமம், திருப்பாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி நேற்று தேர்திருவிழா நடந்தது.திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், மெதூர், ஆவூர், வேம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.வாண வேடிக்கைகளுடன் காலை 9.00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர் மாடவீதிகளில் வழியாக சென்று பகல் 12.00 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.கிராமத்து மக்கள் உற்சவ பெருமானுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.