சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :4225 days ago
சாத்தூர் : சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோயிலில் ,சாத்தூரப்பனுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருகல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு, சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாலையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் தக்கார் அஜித், செயல்அலுவலர் ராமராஜா, கோயில் பணியாளர்கள் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.