ஜலக்கண் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4337 days ago
அன்னூர்: நாரணாபுரம் ஜலக்கண் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குன்னத்தூர் ஊராட்சி, நாரணாபுரத்திலுள்ள செல்வ விநாயகர் மற்றும் ஜலக்கண் மாரியம்மன் கோவில் 30 ஆண்டு பழமையானது. இக்கோவிலுள்ள பிரபாவளையம் பிரசித்தி பெற்றது. கோவில் திருப்பணி செய்யப்பட்டதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. கணபதி ஹோமம், முதற்கால யாகபூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலையில் யாக பூஜை, புனித நீர் அடங்கிய குடங்கள் கோவிலை வலம் வருதல் நடந்தது. காலை 7.15 மணிக்கு விமானத்திற்கும், செல்வ விநாயகர் மற்றும் ஜலக்கண் மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்செய்யப்பட்டது. பழநி ஆண்டர் கோவில் ஸ்தானிகர் சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை, அலங்கார பூஜை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தது.