கருப்பணசுவாமி, காளியம்மன், முத்தாலம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்
ADDED :4226 days ago
தாடிக்கொம்பு: அகரம் கிராமம், சத்திர பட்டியில் உள்ள கருப்பணசுவாமி, காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் மற்றும் மணி மண்டபம் திறப்புவிழா நடந்தது. பூர்ணாஹூதி தீபாராதனை, யாத்ராதானம் கடம் புறப்பாடு, விமான கும்பாபிஷேகம் ஆகிய வைபவங்களை தொடர்ந்து மூலவர் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் நாட்டாமை, அகரம் பேரூராட்சி துனை தலைவர் சக்திவேல், பெரியதனக்காரர் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.