உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமர வேரில் சுயம்பு விநாயகர்: கிராம மக்கள் வழிபாடு!

அரசமர வேரில் சுயம்பு விநாயகர்: கிராம மக்கள் வழிபாடு!

கச்சிராயபாளையம்: கருமந்துறையில் அரச மரத்தில் சுயம்பு உருவமாக ஏற்பட்ட விநாயகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தில் மணியார்பாளையம் ரோட்டில் 100 ஆண்டுகளுக்கு மேலான பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் மேற்கு பகுதியில் மரத்தின் வேரில் விநாயகர் உருவத்தில் மரம் தண்டுப்பகுதி வளர்ந்து விநாயகர் உருவம் போல காணப்பட்டது. கிராம மக்கள் சுயம்பாக உருவாகிய விநாயகரை பார்த்து பூஜை செய்து வழிபட துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !