சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :4226 days ago
திண்டிவனம்: திண்டிவனம் சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று காலை நடந்தது.திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் உள்ளது சச்சிதானந்தவள்ளி சமேத சதனபுரீஸ்வரர் கோவில். இக் கோவிலில் கடந்த 5 ம் தேதி முதல் ஆண்டு பெருவிழா நடந்து வருகிறது. விழா நாட்களில் தினம் மாலை 7 மணிக்கு, சுவாமியும் அம்பாளும் கோவில் வலம் வந்தனர். நேற்று முன் தினம் (12 ம் தேதி) இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இன்று தீர்த்தவாரி உற்சவம், நாளை விடையாற்றி நடக்கிறது.