உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவ சித்தாந்த இலவச பயிற்சி: மே 7ல் ஆரம்பம்!

சைவ சித்தாந்த இலவச பயிற்சி: மே 7ல் ஆரம்பம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில், சைவ நெறிக் கழகத்தின், இலவச சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு மே 7ல், துவங்குகிறது. இப்பயிற்சி வகுப்பு 1987 முதல் நடத்தப்படுகிறது. மே 7 முதல் 21 வரை 15 நாட்கள் பயிற்சியளிக்கப்படும். பொது, சிறப்பு என 2 நிலைகளில் சென்னை, மதுரை காமராஜர் பல்கலை சைவ சித்தாந்த துறை முன்னாள் பேராசிரியர் ஆனந்தராசன் இவ்வகுப்பின் முதன்மை இயக்குனராக உள்ளார். முன்னாள் பேராசிரியர்கள் பயிற்சி வழங்குவர். ஆண், பெண் இருபாலருக்கும் தங்கும் இடம் தனித்தனியாக வழங்கப்படும், பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம். விண்ணப்பம் பெற சுயமுகவரி எழுதிய உறையுடன், தலைவர், சைவ நெறிக்கழகம், 809/8, மெயின்ரோடு, விக்கிரமசிங்கபுரம்- 627 425 என்ற முகவரிக்கு கடிதம் எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். 99941 46395, 97904 80891என்ற எண்களில் விபரம் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஏப்.,5 க்குள் வந்து சேர வேண்டும். இத்தகவலை சைவசித்தாந்த நெறிக்கழக செயலாளர் கந்தசுவாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !