சென்ராய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் தோட்டம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக விழா நடந்தது. விழா கடந்த 11ம் தேதி காலை 7:00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, பாலிகா கும்ப பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முதற்கால பூஜை, ரக்ஷாபந்தனம், தன்வந்திரி ேஹாம பூஜைகளும்; இரவு 7:00 மணிக்கு துவார பூஜை, யாக ஆரம்பம், லெட்சுமி ேஹாமம், நரசிம்ம ேஹாமம், பரிவார மூர்த்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு சகஸ்ரநாம ேஹாமம், காலை 8:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, சாற்றுமுறை, கடம்புறப்பாடு, காலை 9:00 மணி முதல் 10:00 மணிவரை மகா கும்பாபிேஷகம், காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிேஷக விழா செருவாச்சூர் மதுரகாளியம்மன் உபாசகர் சம்பத்குமார் தலைமையில் விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள், விழாக்குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.