கடம்பூர் வேம்பி அம்மன் கோவிலில் சுவாமி வீதி புறப்பாடு
ADDED :4258 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் வேம்பி அம்மன் கோவிலில் விநாயகர் , பாலசுப்ரமணியர், துர்க்கையம்மன் மற்றும் வேம்பியம்மன் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு புதிய கோபுரம் அமைக்கப்பட்டு மகாகும்õபிஷேகம் நடந்தது.இதனையொட்டி கடந்த 11-ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கி பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்து இரவு முதல் கால யாகசாலை பூஜையும், 12-ம் தேதி கால இரண்டாம் யாகசாலை பூஜைகள் பூர்ணாகிதி, மகாதீபராதனை நடந்தது.கடம் புறப்பாடு செய்து வேம்பியம்மன் துர்க்கை உள்ளிட்ட சன்னிதி கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மதியம் வேம்பியம்மனுக்கு மகா அபிஷேகம் , சிறப்பு தீபாராதனைகள் நடந் தது. இரவு வேம்பியம்மன் யானை மீது அமர்ந்து வீதி புறப்பாடு நடந்தது.